செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
பேரூராட்சியில் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்..
புதுப்பாளையம் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து தினசரி கிருமிநாசினி சுகாதார பணியாளர்களால் கைப்பம்பு மற்றும் டிராக்டர் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தூய்மைப் பணி, குடிநீர் பராமரிப்பு கழிவுநீர் கால்வாய் சுத்தம் போன்ற அத்தியாவசிய பணிகள் தடையின்றி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் சி.அம்சா (பொறுப்பு) பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் பிச்சாண்டி, மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் கலந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.