17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 26 வது நாளாக 10,000 ஏழை குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்

26 வது நாளாக 10,000 ஏழை குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்

எழுதியவர்: mohan May 3, 2020, 12:35 pm

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கொரோனா 144 ஊரடங்கு பிறப்பித்தது 39 நாட்கள் கடந்த நிலையில் இன்று 26 நாட்களாக 400-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கி வரும் அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை இன்று தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள நரசிங்க நத்தம் உத்திரங்குடி கேசவன் பாளையம் மற்றும் குத்தாலம் ஊராட்சியில் திருமணஞ்சேரி ஆகிய கிராமங்களில் வாழும் 400 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.மேலும் அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளையின் தொலைபேசி எண்ணை அழைத்து உதவி வேண்டும் என கேட்பவர்களுக்கு அறக்கட்டளை முழுவதுமாக உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளது என்று அறக்கட்டளையின் நிறுவனர் அய்யப்பன் கூறினார்.

அறக்கட்டளை உறுப்பினர்களை கொண்டு இதுவரை 10,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களான அரிசி காய்கறிகள் கொடுக்கப்பட்டுள்ளது என அய்யப்பன் சிங்கராசு அறக்கட்டளையின் நிறுவனர் அய்யப்பன் அவர்கள் கூறினார் இந்நிகழ்வில் அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை தலைமை செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினர்கள் விஜயேந்திரன் இலவரசன் ஸ்ரீதர் உடன் இருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!