17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை பள்ளிகூடங்களில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள்..

கீழக்கரை பள்ளிகூடங்களில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2017, 7:58 pm

கீழக்கரையில் இன்று (26-07-2017) டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் டெங்கு காய்ச்சல் பற்றிய பதாகைகள் மற்றும் தடுக்கும் முறைகளை விளக்கும் விதமாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதே போல் ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு தரும் விதமாக படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

அனைத்து பள்ளிகளிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!