18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..

மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..

எழுதியவர்: Askar May 2, 2020, 7:38 pm

மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது.

சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை – தமிழக அரசு.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம்.

 “ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்”.

“பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்”.

“சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை”.

 “மொபைல் கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், மின் மோட்டார் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்”.

“ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்”.

“தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை”.

கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!