18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புற நகரில் 144 தடை உத்தரவை மீறிய 9711 பேர் மீது வழக்குப்பதிவு

புற நகரில் 144 தடை உத்தரவை மீறிய 9711 பேர் மீது வழக்குப்பதிவு

எழுதியவர்: mohan April 30, 2020, 5:33 pm

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 29.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 9711 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 5049 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!