17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோட்டூர் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரானா நிவாரண உதவி

கோட்டூர் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரானா நிவாரண உதவி

எழுதியவர்: mohan April 30, 2020, 2:50 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தடுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது ஊக்கப்படுத்தும் விதமாக ஊராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தனது சொந்த நிதியிலிருந்து அரிசி, காய்கறிகள், மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கருப்புசாமி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி துணை அலுவலர்கள் புவனேஸ்வரி , நாகலட்சுமி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கீதா ஜான்போஸ்கோ, ஊராட்சி மன்ற செயலாளர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!