18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம். ஊராட்சிமன்ற தலைவர்கள் சொந்த நிதியில் வழங்கினார்கள்

நிலக்கோட்டை பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம். ஊராட்சிமன்ற தலைவர்கள் சொந்த நிதியில் வழங்கினார்கள்

எழுதியவர்: mohan April 29, 2020, 5:48 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தீமை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் உணவு பண்டங்கள் தலைவர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், அதிமுக நிர்வாகி குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டியில் தலைவர் வீர சின்னு தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!