17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் கொரானா பாதித்த 3 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்

ராமநாதபுரத்தில் கொரானா பாதித்த 3 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்

எழுதியவர்: mohan April 29, 2020, 4:32 pm

கொரானா தொற்று பாதித்தோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அனுமதிக்கப்பட்டனர். இதில் பரமக்குடி, மண்டபம், ஆனந்தூர் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என ஆண்கள் 3 பேர் குணமடைந்த நிலையில் இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த இவர்கள் 3 பேரும், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்த 15 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர், இன்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்னும், 5 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!