17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை எளியோருக்கு நிவாரணம்

இராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை எளியோருக்கு நிவாரணம்

எழுதியவர்: mohan April 29, 2020, 4:24 pm

இராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை காலனி ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பாவாணர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் வே.திலீபன் ஏற்பாட்டில் அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் பஜார் காவல் இன்ஸ்பெக்டர் தனபாலன், அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் கே.முத்துக்கண்ணன் ஆகியோர் வழங்கினர். சூரன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. பாவாணர் கல்வி அறக்கட்டளை சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் குருப்ஸ் கயா, மத்திய மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் வி.கே.சேக்கிழார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சிந்தியா திலீபன் ஏற்பாடு செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!