18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் குடும்பத்திற்கு உதவி..

இராஜபாளையத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் குடும்பத்திற்கு உதவி..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2020, 8:39 pm

இராஜபாளையத்தில் 144 தடை உத்தரவால் தங்கள் பள்ளியில் படிக்கும் 100 ஏழை மாணவ குடும்பத்தினருக்கு காய்கறி, பலசரக்கு மற்றும் கபசுர குடிநீர் வழங்கிய பள்ளி நிர்வாகம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் படித்து வரக்கூடிய 100 மாணவ, மாணவிகள் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து 144 தடை உத்தரவால் வறுமையில் வாழக்கூடிய அவல நிலையை அறிந்து, அந்த குடும்பத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, காய்கறி, அரிசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய கபசுர குடிநீர் போன்றவற்றை பள்ளி செயலாளர் சீதாராமன், தனி வட்டாட்சியர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழங்கினர்.

தங்கள் பள்ளியில் படிக்க கூடிய மாணவ மாணவிகளின் குடும்பத்தினருக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி செயலாளர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!