17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மற்றும் பயிறு வகைகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மற்றும் பயிறு வகைகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது

எழுதியவர்: mohan April 28, 2020, 12:45 pm

நாகப்பட்டினம் விற்பனை குழு செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மற்றும் பயிறு வகைகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. மறைமுக ஏலமானது, குத்தாலம் ஒழுங்குமுறை கண்காணிப்பாளர் சங்கரராஜன் தலைமையில், செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட பொருப்பாளர் பி.எம் பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலுவலகப் பணியாளர்கள் அகோரமூர்த்தி, மதியழகன் உடனிருந்தனர்.மேலும், தஞ்சை, கடலூர், திருவரூர் வியபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர் நெல் 485 குவிண்டாலும் பயிறு 110 குவிண்டாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டது.பயிறு அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 7360க்கும் நெல் ஒரு குவிண்டால் 1950கும் விற்பனை செய்யப்பட்டது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!