18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளிமலை அருணகிரிநாதர் மடத்தில் சன்னியாசிகளுக்கு முகுந்தராயபுரம் அரிமா சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது

வள்ளிமலை அருணகிரிநாதர் மடத்தில் சன்னியாசிகளுக்கு முகுந்தராயபுரம் அரிமா சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan April 28, 2020, 12:34 pm

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் சன்னியாசிகள் உள்ளனர். அவர்கள் ஊரடங்கால் உணவுக்கு வழியின்றி தவிர்த்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியை அதிமுக முன்னாள் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கோவில் நிர்வாகம், மற்றும் அங்குள்ள அருணகிரிநாதர் மடத்தின் மூலமாக தன்னார்வல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தேவையான உணவு பொருட்களை பெற்று ஒவ்வொரு நாளும் சம்மந்தப்பட்டதன்னார்வல அமைப்புகளுடன் இணைந்து சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்ந்து இந்த சேவையை அதிமுக பிரமுகர் ஆனந்தன் செய்து வருகின்றார். சம்பவத்தன்று ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் அரிமா சங்கம் மூலம் உணவு வழங்கப்பட்டது.இந்த உணவு அளிக்கும் நிகழ்ச்சி வருவாய் துறை அனுமதியோடு நடத்தப்பட்டு வருகிறது.

கே.எம்.வாரியார் நிருபர்.வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!