18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரசவ வழியால் தவித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளருக்கு பாராட்டு

பிரசவ வழியால் தவித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளருக்கு பாராட்டு

எழுதியவர்: mohan April 28, 2020, 12:19 pm

மதுரை மாநகரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வில்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அவரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதாலும் பிற வாகன வசதிகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரன்  ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணியாளர்கள் அந்த பெண்ணின் நிலைமையை எடுத்துரைத்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் தனது வாகனத்தில் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு பத்திரமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார்.ஊரடங்கு காலமென்பதால் மதுரை மாநகர் முழுவதும் அமைதியாக இருந்த சூழ்நிலையில் கர்பிணி பெண்ணுக்கு ஓடோடி உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்  பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!