இராமேஸ்வரத்தில கஞ்சா, பழச்சாறு மூலம் தயாரித்த பாங்கு
எனும் போதை பானம் விற்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தல் படி இராமேஸ்வரம் நகர் எஸ்.ஐ. சசிகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். ராமேஸ்வரம் நடுத்தெரு பிரவீன்குமார், பத்ரிநாத் ஆகியோரை பிடித்து விசாரித்த போது போதை பானம் தயாரித்து மது பிரியர்களிடம் லிட்டர் ரூ.300க்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து 20 லிட்டர் போதை பானம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரவீன்குமார் 31, பத்ரி நாதன் 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமேஸ்வரத்தில் போதை பானம் தயாரித்து விற்ற இருவர் கைது
எழுதியவர்: mohan April 28, 2020, 12:06 pm




You must be logged in to post a comment.