18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி வட்டார மக்களுக்கு எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு நிவாரணம்

திருப்புல்லாணி வட்டார மக்களுக்கு எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு நிவாரணம்

எழுதியவர்: mohan April 28, 2020, 12:03 pm

இராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் வழிகாட்டல் படி , திருப்புலாணி வட்டாரம் எல். கருங்குளம், அச்சங்குடி, லாந்தை, கண்ணந்தை கிராமங்களைச் சேர்ந்த கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், சுகாதாரப் பணியாளர்கள், இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களின் 140 குடும்பங்களுக்கு கொரானா பேரிடர் நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு மத்திய மாநில எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெ.மரிய ஜேம்ஸ் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் எஸ்.கர்ணன், மாவட்டச் செயலாளர் வி.கே.சேக்கிழார், பொருளாளர் கே. பாபு, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.ஆர்.காளி தாஸ், செய்தி தொடர்பாளர் சி. தங்கவேலு, நிதி செயலாளர்கள் ராமர், சுபாஷ் சந்திர போஸ், நகர் செயலர் அழகுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், பயனாளிகள் முகக்கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை பின்பற்றினர். நிகழ்வின்போது கொரானா விழிப்புணர்வு. பிரசாரம் செய்து அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!