18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்டராம்பட்டு அருகே அதிரடி ரெய்டால் 260 லிட்டர் கள்ள சாராயம்  பறிமுதல் எட்டு பேர் கைது..

தண்டராம்பட்டு அருகே அதிரடி ரெய்டால் 260 லிட்டர் கள்ள சாராயம்  பறிமுதல் எட்டு பேர் கைது..

எழுதியவர்: Askar April 28, 2020, 11:26 am

தண்டராம்பட்டு அருகே அதிரடி ரெய்டால் 260 லிட்டர் கள்ள சாராயம்  பறிமுதல் எட்டு பேர் கைது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே அதிரடி ரெய்டால் 260 லிட்டர் கள்ள சாராயம் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை எஸ்பி சிபி சக்கரவர்த்தி உத்தரவுப்படி ,கூடுதல் எஸ்பி அசோக்குமார் வழிகாட்டுதலின்படி ருரல் டிஎஸ்பி ஹேமச்சந்திரா, தலைமையில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் பாரதி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமாரசாமி, நசீருதீன் மற்றும் போலீசார் இணைந்து பீமார பட்டி , மேல் திருவடத்தனூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த தேவரடியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ஆனந்தன் 25 மேல் திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் ராஜீவ் காந்தி 34 பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் செல்வராஜ் 29 ,சேகர் மகன் கோபி 42, பாண்டி மகன் கண்ணன் 50, பொன்னுசாமி மகன் ஏழுமலை 45, ராமர் 30, கோவிந்தன் 60, ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 260 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் . செய்தனர் நிலம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!