17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாட்டுதாவணி சந்தையில் சமூக இடைவெளி பேணாத காரணத்தால் மாற்று ஏற்பாடுகள் தீவிரம்..

மதுரை மாட்டுதாவணி சந்தையில் சமூக இடைவெளி பேணாத காரணத்தால் மாற்று ஏற்பாடுகள் தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 27, 2020, 9:50 pm

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தையில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத காரணத்தினாலும், பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தற்காலிகமாக நகர்வு செய்யப்பட்டு மாற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அதன்படி எம்.ஜி.ஆர். ரேஸ்கோர்ஸ் மைதானம், ஓத்தக்கடை விவசாயக் கல்லூரி மைதானம், நத்தம் மெயின் ரோடு, யாதவர் ஆண்கள் கல்லூரி மைதானம், மாட்டுத்தாவணி கனரக வாகனம் நிறுத்துமிடம்,டி.பி.கே. ரோடு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மைதானம், ஆகிய 5 பகுதிகளுக்கு பிரிக்கப்பட்டு தற்காலிகமாக செயல்பட உள்ளது.

போக்குவரத்து வசதிகள்,குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்து விற்பனை செய்வதற்கான இட வசதிகள் ஆகியவற்றை குறித்து உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தற்காலிக மொத்த விற்பனை சந்தை அமைய உள்ள எம்.ஜி.ஆர். ரேஸ்கோர்ஸ் மைதானம், ஓத்தக்கடை விவசாயக் கல்லூரி மைதானம், மாட்டுத்தாவணி கனரக வாகனம் நிறுத்துமிடம், மண்டேலா நகர்,அம்மா திடல் போன்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!