17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்-சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்-சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்…

எழுதியவர்: Askar April 27, 2020, 9:46 pm

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்-சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொற்று வல்லரசு நாடுகள் உட்பட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளன.

அதன்படி சுரண்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழச்சுரண்டை மற்றும் பரன்குன்றாபுரம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் சமூக விலகலை பேணி பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சுரண்டை மற்றும் பரன்குன்றாபுரம் ஆகிய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார், கொரோனாவை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பு, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், வீட்டை விட்டு வெளியே வராமல் இருத்தல், சமூக விலகலை கடைபிடித்தல், முக கவசம் பயன்படுத்துதல், தேவைப்படுகிற நேரங்களில் காவல்துறையின் ஒத்துழைப்பை கோருதல், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்வில் ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் சமூக விலகலை பேணி பங்கேற்றனர்.

மேலும் வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி அமைப்பின் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சேவைகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!