18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை திமுக சார்பில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

கீழக்கரை திமுக சார்பில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் April 27, 2020, 7:30 pm

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும் காரணத்தினால், ஏழை எளிய மக்கள் சிரமப்படுவதை கருத்தில்கொண்டு.  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் ஆங்காங்கே உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நகர கழக செயலாளர் பஷீர் அஹமது தலைமையிலும், மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று சுமார் 500 குடும்பங்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்கள்.

இதில் நகர் துணைச்செயலாளர் ஜமால் ஃபாரூக், நைனார் ஐயா, மாவட்ட பிரதிநிதி மரிகா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் S.K.V முகம்மது சுஐபு இளைஞரணி துணை அமைப்பாளர் பயாஸ் நையும், ஜெயினுதீன், ஆஸ்கர்,சுல்தான் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!