தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது இந்நிலையில் மதுரை மாவட்டம்
உசிலம்பட்டியில் உள்ள 16 வது வார்டில் காளியம்மன் தெருவில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் 144 தடை உத்தரவுனால் வேலைக்கு எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்கள் அன்றாட உணவுக்கும் திண்டாடி வந்தனர் ,அதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மருத்துவரணி தலைவர் விஜய பாண்டியன், அவர்களுக்கு லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என 150 குடும்பங்களுக்கு உணவு வழங்கினாா். முன்னதாக அவர்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு தேடி சென்று முகக் கவசங்கள் வழங்கினார்.
மோடி கிச்சன் சார்பில் உசிலம்பட்டி ஏழை-எளிய குடும்பங்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது
எழுதியவர்: mohan April 27, 2020, 6:10 pm




You must be logged in to post a comment.