17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கால்நடைகளுக்கு மருத்துவ பணிகளை மேற்கொள்ளும் அரசு கால்நடை மருத்துவர்

கால்நடைகளுக்கு மருத்துவ பணிகளை மேற்கொள்ளும் அரசு கால்நடை மருத்துவர்

எழுதியவர்: mohan April 27, 2020, 5:51 pm

மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளுக்கு உரிமையாளர்களின் வீடுகளுக்கு சென்று கால்நடை மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் மதுரையை சேர்ந்த அரசு மருத்துவர்  சிவக்குமார்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுரை 4 நாட்கள் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. . மருந்துக் கடைகள் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரண்டாவது நாளாக இன்று சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறச்சோடின காணப்பட்டன. இந்த சூழ்நிலையில் அரசு கால்நடை மருத்துவர்கள் , மதுரையை அடுத்த முனியாண்டிபுரத்தைச் சேர்ந்தவரின் பசு மாடு ஜீரணக் கோளாறு காரணமாக எழுந்து நடக்க முடியாமல் அவதிபட்டு வந்துள்ளது. அதையடுத்து கால்நடை பராமரிப்புத் துறையின் அவசரகால தொடர்பு எண்ணுக்கு ( 1962 ) தொடர்பு கொண்டு பசுவின் உரிமையாளர் தகவல் தெரிவித்தார். உடனடியாக விளாச்சேரி கால்நடை மருந்தக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான குழு விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!