18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவரை செங்கம் போலீசார் கைது செய்தனர்..

செங்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவரை செங்கம் போலீசார் கைது செய்தனர்..

எழுதியவர்: Askar April 27, 2020, 4:18 pm

செங்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவரை செங்கம் போலீசார் கைது செய்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் கள்ளச் சாராயம் விற்ற இருவர் கைது30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

144 ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதனை சில சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொண்டு செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். ஜவ்வாது மலை பகுதிகளில் கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக செங்கம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததுது. அதனை அடுத்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் உத்தரவின்பேரில், செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கிளையூர் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்திக் (வயது.29) என்பவரும் செங்கம் அடுத்த வளையாம்பட்டு அருகே உள்ள குமாரசாமி பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது.41) ஆகிய இருவரும கள்ளச்சாராயம் விற்று வந்த நிலையில் செங்கம் போலீசாரால் 30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்து கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!