17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இரண்டாவது நாள் ஊரடங்கு… சோதனை பணியில் தேசிய மாணவர் படை..

மதுரையில் இரண்டாவது நாள் ஊரடங்கு… சோதனை பணியில் தேசிய மாணவர் படை..

எழுதியவர்: ஆசிரியர் April 27, 2020, 3:16 pm

நான்கு நாள் முழு ஊரடங்கு உத்தரவு மதுரை மாநகராட்சி உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது இதனையடுத்து இன்று (27/04/2020) இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். 100 சதவீத வாகனங்கள் இயக்கப்படாமல், மேலும் வங்கி உள்ளிட்ட அரசு வேலைக்கு செல்வர் மட்டுமே வெளியே வந்தார்கள். அவர்களின் காவல் துறையினர் சோதனை செய்தபிறகே அனுப்பி வைத்தனர்.

இன்று மதுரையில் பல பகுதிகளில் காவல் துறையுடன் இணைந்து தேசிய மாணவர் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக இன்று சுப்ரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் மருத்துவர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் வங்கி மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே வெளியே வந்த மற்ற வாகனங்கள் அதிகமாக எதுவும் வெளியே வரவில்லை. இதனால் 100% பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு அளித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரியவருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!