18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அன்று இடியாப்ப கடை.. இன்று காவலர் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணி..

அன்று இடியாப்ப கடை.. இன்று காவலர் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணி..

எழுதியவர்: ஆசிரியர் April 27, 2020, 3:29 pm

மதுரை வசந்த நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் வசந்த நகர் பகுதியில் இடியாப்ப கடை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக தற்பொழுது கடை அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இவர் தன் பொழுதை வீணாகக் கழிக்காமல் மதுரையிலுள்ள ஜெய்ஹிந்துபுரம் மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையங்களில் உள்ள காவலர்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காவலர் வாகனங்களுக்கு  கிருமிநாசினி அடித்து வருகிறார்.

இது பற்றி ஜெயபிரகாஷ் கூறியதாவது, “வீட்டில் சும்மா பொழுதைக் கழிப்பதற்கு என்னால் முடிந்தது நம்மை காக்கும் காவலர்களுக்கு முடிந்த அளவிற்கு அவர்களை காக்க வேண்டும், அதனால் என்னால் முடிந்த அளவிற்கு காவலரின் வாகனங்களுக்கு கிருமி நாசினிகளை அடித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன் என தெரிவித்தார். மேலும் இது எனக்கு மன திருப்தியாகவும் உள்ளது,  தினசரி வந்து காவலர்களின் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து செல்வேன்“ எனவும் தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!