17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் உடல் ஊனமுற்றோர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் உடல் ஊனமுற்றோர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

எழுதியவர்: mohan April 26, 2020, 6:59 pm

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அம்மா உணவகத்தில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைக்கும் அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா துவக்கி வைத்தார்.அதன் பிறகு 400 க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்களுக்கு , 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், மற்றும் 500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!