18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே பூமிக்கடியில் பதுக்கி வைத்த 6 சிலைகள் யாக சாலை நாணயங்கள், மிளிரும் கற்கள் பறிமுதல் விஏஓ., தலையார் உட்பட 5 பேர் கைது

கமுதி அருகே பூமிக்கடியில் பதுக்கி வைத்த 6 சிலைகள் யாக சாலை நாணயங்கள், மிளிரும் கற்கள் பறிமுதல் விஏஓ., தலையார் உட்பட 5 பேர் கைது

எழுதியவர்: mohan April 26, 2020, 6:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்கசிலைகள் இருப்பதாகவும், யாகம் நடத்தினால் பழமையான சிலைகள் கிட்டும் என, ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில், கமுதி தாலுகா பேரையூர் அருகே ஆனையூரில், சில வாரங்களுக்கு முன் யாகம் நடத்தினர். அப்போது தங்க சிலைகளுக்கு பதிலாக, பழமையான சிலைகள் கிடைத்தன. பழமையான சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்ட கும்பல், கமுதி அருகே தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய காத்திருந்தது. இது குறித்து இ ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாருக்கு அவரது பிரத்யேக அலைபேசி (94899 19722) வாயிலாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி எஸ்.பி., விவேக், டிஎஸ்பி., கள் ராஜேஷ் (முதுகுளத்துார்), மகேந்திரன் (கமுதி), ராமநாதபுரம் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திவாகர் தலைமையில் போலீசார், விசாரித்தனர் இதில், தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த 6 சிலைகள், யாக பூஜையில் பயன்படுத்தப்படும் நாணயங்கள், மாந்திரீகம் செய்த தகடுகள், மிளிரும் அலங்கார கற்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதுகுளத்துார் செல்வக்குமார், தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை விஏஓ., செல்லப்பாண்டி, முருகராஜ், ஏனாதியைச் சேர்ந்த பெண் முத்து, கீழகாஞ்சிரங்குளம் தலையாரி (ஓய்வு) மகாதேவன் ஆகியோரை கைது செய்து, முக்கிய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடிகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!