17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்திராயிருப்பு ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர்…

வத்திராயிருப்பு ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர்…

எழுதியவர்: mohan April 26, 2020, 6:39 pm

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா உட்பட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஆயுதப்படை காவலர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கபசுர குடிநீர் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!