தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் நலன் கருதி அன்றாட தேவையான காய்கறி சந்தை மட்டும் தற்காலிகமாக இடம் மாற்றி சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்யவும் அரசால் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு பலகை இருந்தால் மட்டும் விற்பனை செய்யவும் அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காய்கறி சந்தையும் அரசுப் பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அரசின் விலை நிர்ணயப்பட்டியல் அறிவிப்பு பலகை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை பொதுமக்கள் வாங்க ஏற்ப்பாடு செய்யப்பட்டது.ஆரம்பத்தில் விலை அறிவிப்பு பலகை போர்டு வைக்கப்பட்டு விறபனை செய்யப்பட்டது.ஆனால் கடந்த இருநாட்களாக அரசின் விலை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டவில்லை.வியாபாரிகளிடம் கேட்டதற்கு அரசு சார்பில் வழங்கப்படவில்லை எனக் கூறினார். இதுகுறித்து அரசு சார்பில் எவ்வித பதிலும் கூறப்படாத நிலையில் விலை அறிவிப்பு பலகை இல்லாமல் வியாபாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர்.காய்கறிகளின் வரத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் காலை 10 மணிக்கு மேல் விலையை இருமடங்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தினக்கூலி வேலை இழந்து நிற்கும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.. இதனை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசு நிர்ணயித்த விலையை மட்டும் உசிலம்பட்டி காய்கறி சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.