17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நீட் தேர்வை விலக்க கோரி திமுக சார்பாக நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு…

நீட் தேர்வை விலக்க கோரி திமுக சார்பாக நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு…

எழுதியவர்: Mohamed July 24, 2017, 6:44 pm

சென்னையில் நீட் தேர்வை கண்டித்து 27-ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறவுள்ள மனித சங்கிலியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் கே எம் காதர் மொய்தீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியும் முழுமையாக ஆதரவு அளிக்கும் என எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நீட் தேர்வினால் சாமானிய மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மருத்துவம் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!