17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதி மக்களுக்கு திமுக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதி மக்களுக்கு திமுக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

எழுதியவர்: mohan April 26, 2020, 5:59 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி மீனவர் உள்ளிட்ட எளியோருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர் செயலர் டி.ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கா.சம்பத் ராஜா ஆகியோர் வழங்கினர்.திருப்புல்லாணி ஒன்றியம் பஞ்சம் தாங்கி, சீனிவலசை, தேச்சிவலசை, கீழவலசை, கள்ளகுளம், திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கை ஊராடங்கால் வாழ்வாதாரம் 500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்களை அரிசி, மளிகை பொருட்களை மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.புல்லாணி ஆகியோர்வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்ரமணியன்செய்தார். திருவாடானை ஒன்றியம் திருவெற்றியூர் கவுன்சிலுக்கு உட்பட்ட 660 வீடுகளுக்கு காய்கறிகள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் முதல் கட்ட தொகுப்பு பைகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன் தலைமையில், திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார் வழங்கினார்.திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரத்தில் நூறு குடும்பங்களுக்கு (சத்யா நகரில் 12 குடும்பம் உள்பட) அரிசி, மளிகை பொருட்களை நகர் பொறுப்பாளர், கே.இ.நாசர்கான் மற்றும் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!