17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

எழுதியவர்: mohan April 26, 2020, 2:15 pm

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டத்தில் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டங்களை வீடுகளில் நடத்தினர். இலுப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர் டி.இராசையன் குடும்பத்தினருடன் தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏற்றி கோரிக்கைகளை முழங்கினார். கொத்தங்குடி ஊராட்சி பனங்குடியில் சங்கத்தின் வட்டத்தலைவர் என்.சந்திரமோகன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கருப்புக்கொடியுன்,கோரிக்கை பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!