17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் எதிரொலி-தெருக்களில் தடுப்பு வைத்து தடை விதித்த பொதுமக்கள்…

கொரோனா வைரஸ் எதிரொலி-தெருக்களில் தடுப்பு வைத்து தடை விதித்த பொதுமக்கள்…

எழுதியவர்: Askar April 25, 2020, 9:51 pm

கொரோனா வைரஸ் எதிரொலி-தெருக்களில் தடுப்பு வைத்து தடை விதித்த பொதுமக்கள்…

வரகுணராமபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனாவை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல்வேறு விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பல பகுதிகளில் போலீசாரின் தடையை மீறியும் பகல் ஓரு மணிக்கு மேலும் வெளியே நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் பகுதியில் வசிப்பவர்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகள் தவிர பிற பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்கவும், வெளி நபர்கள் தேவையில்லாமல் வரகுணராமபுரம் பகுதிக்குள் வருவதை தடுக்கவும், இதனால் கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்கலாம் என ஊர் பெரியவர்கள் முடிவு செய்து அதன் படி வரகுணராமபுரம் வரும் 6 வழிகளில் மரம், கம்பு, வேப்பிலை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் கைகளை கழுவி செல்ல சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து இப்பகுதி இளைஞர் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!