18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக பார்வையற்றோருக்கு உதவிகள்..

மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக பார்வையற்றோருக்கு உதவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2020, 10:00 pm

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசை நண்பர்கள் குழுவை சேர்ந்த பாலாஜி குபேந்திரன் குருராஜன் மற்றும் தூய்மை விழிகள் டிரஸ்ட் நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் இணைந்து மதுரை மாவட்டத்திலுள்ள 250க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 20க்கும் மேற்பட்ட மளிகை பொருள் தொகுப்பு வழங்கினர்.

அதோடு குடும்பத்திற்கு பத்து முக கவசங்களும் வழங்கினர். இவர்களுக்கு மதுரை மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பினர் பேருதவியாக இருந்து வழிகாட்டினார். சக்கிமங்கலம் வில்லாபுரம் பெருங்குடி செல்லூர் பிபிகுலம் மற்றும் சுந்தர்ராஜன் பட்டி ஆகிய இடங்களில் குடும்பத் தலைவர்கள் இருவருக்குமே பார்வையற்றவர் களாக உள்ளனர். இதனால் இவர்கள் தினமும் அப்பெண் மற்றும் உற்பத்தி போன்ற பொருட்களை விற்று குடும்பத்தை வழி நடத்தி வந்தனர். தற்போது அது இயலாத நிலையில் வறுமையில் வாடுவதாக அவர்களை அடையாளம் கண்டு அந்த குடும்பத்திற்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!