18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழைநியூஸ் செய்தி எதிரொலி.. ஆவின் விற்பனையகம் மூடல்..

கீழைநியூஸ் செய்தி எதிரொலி.. ஆவின் விற்பனையகம் மூடல்..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2020, 8:47 pm

நேற்று (24/04/2020) மதுரை பழங்கானத்தம் பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பதை சத்தியபாதை – கீழை நியூஸ் நிருபர் நேரடியாக வீடியோவாக எடுத்து செய்தி வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இச்செய்தி வெளியான உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட முகவருக்கு ரூ.3000/- அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் ஓரு வாரம் வியாபாரம் செய்யவும் தடை விதித்துள்ளனர்.

இந்த விசயத்தை பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்த கீழைநியூஸ்-சத்தியபாதை நிர்வாகத்துக்கும், உடனடியாக தீர்வு கண்ட ஆவின் நிர்வாகத்துக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!