18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..

எழுதியவர்: Askar April 25, 2020, 7:56 pm

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ், அழகிரி கேட்டுக்கொண்டதின் பேரில் கொரானா ஊரடங்கு நேரத்தில் ஏழை,எளிய மக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்டத்தின் சார்பாக அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் மூத்த வழக்கறிஞர். நோட்டரி அட்வகேட்,R.குப்புசாமியின் சார்பாக 500 கிலோ அரிசி மற்றும் முகம்மது சித்திக்  சார்பாக ரூ,10000 ம் மதிப்புள்ள மளிகை, காய்கறிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் முக கவசங்களுடன் கலந்துகொண்டனர் .இந்த நிகழ்வில் தொடர்ந்து பழநி , திண்டுக்கல் பகுதி மக்களுக்கு பல உதவிகள் செய்துவரும் மூத்தவழக்கறிஞர் மற்றும் மாநில PCC செயற்குழு உறுப்பினர் . நோட்டரி அட்வகேட் .R.குப்புசாமியின் சேவைகளை பாராட்டி மேற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சிவசக்திவேல்  சால்வை அணுவித்து பாராட்டினார்கள் . விழாவில் கொரானா ஊரடங்கு நேரத்தில் நிதியுதவி , பொருளுதவி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!