17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் செலவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் செலவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

எழுதியவர்: mohan April 25, 2020, 4:24 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான சத்திரபட்டி, முறம்பு, கோபாலபுரம், மேலராஜகுலராமன் உள்ளிட்ட கிராமங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் 265 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ரூ.4லட்சம் செலவில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் கந்தகிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!