18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிணம் இருந்த கிணற்றில் தண்ணீர் குடித்த மக்கள்! உண்மை தெரிந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம்!

பிணம் இருந்த கிணற்றில் தண்ணீர் குடித்த மக்கள்! உண்மை தெரிந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம்!

எழுதியவர்: Askar April 25, 2020, 4:18 pm

பிணம் இருந்த கிணற்றில் தண்ணீர் குடித்த மக்கள்! உண்மை தெரிந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம்!


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் (23). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு மாத காலமாக மறுவாழ்வு மையத்தில் இருந்தார்.

பின்னர் திரும்பிய இவர், மது கிடைக்காமல் புலம்பியபடி 23ஆம் தேதி வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து, கமுதி அருகே உள்ள அய்யன் கோவில் பட்டி குடிநீர் கிணற்றில் 23ம் தேதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்தது, அந்த ஊர் மக்களுக்கு தெரியாத நிலையில் இன்று காலை பிணமாக மிதந்ததை கண்டு கமுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனிடையே, நேற்று இரவு வரை அய்யன் கோவில் பட்டி,கோவில்பட்டி ஆகிய 2 கிராம மக்கள் அந்த குறிப்பிட்ட கிணற்றில் குடிநீரை அள்ளி குடித்து வந்துள்ளனர்.

தற்போது, அந்த கிணற்றில் பிணம் இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிணம் இருந்த குடிநீரை குடித்ததால், தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

சுகாதார துறை அதிகாரிகள் தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!