17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

எழுதியவர்: mohan April 25, 2020, 4:18 pm

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் நாட்டுப்புற கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அதிமுக சார்பில் கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள்,அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் 500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!