18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நலிவடைந்த குடும்பங்களுக்கு அன்பு அறக்கட்டளை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

நலிவடைந்த குடும்பங்களுக்கு அன்பு அறக்கட்டளை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan April 25, 2020, 12:57 pm

மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சள்வாய்க்கால் கிராமத்தில் அன்பு அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியபொருட்கள் வழங்கப்பட்டது.கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக நலிவடைந்த குடும்பத்தினர் பலர் அத்தியாவசிப் பொருட்களுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகில் கொரோனா தொற்று பாதுகாப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பல குடும்பங்களுக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பாக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மஞ்சள் வாய்க்கால் கிராமத்தில் சுமார் 100 குடும்பத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் அன்பு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!