18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை திமுக இளைஞரணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

கீழக்கரை திமுக இளைஞரணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2020, 11:32 pm

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கபசுரக் குடிநீர் கீழக்கரை நகர கழக செயலாளர் பஷீர் அஹமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் ஆகியோர் அறிவுரைப்படி நகர் திமுக இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நகர் மாணவரணி துணை அமைப்பாளர் இஃப்திகார் ஹசன் துவங்கி வைத்தார்.  இதில் நகர் இளைஞர் அணி சார்ந்தவர்கள் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பயாஸ், நையூம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!