18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே கார் மீது மரம் விழுந்து விபத்து..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே கார் மீது மரம் விழுந்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2020, 7:21 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செல்லும் வழியில் 16 கால் மண்டபம் உள்ளது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த நாகராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், அவருடைய காரை 16 கால் மண்டபம் அருகே நிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (24/04/2020) மாலை மூன்று முப்பது மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது, அச்சமயம் எதிர்பாராதவிதமாக கார் நிறுத்தி வைத்த இடத்தில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகம் தாங்க முடியாமல் அவரது காரின் மீது விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் யாருக்கும் காயமோ எதுவும் ஏற்படவில்லை. மரம் விழுந்ததைக் கண்ட திருப்பரங்குன்றம் காவல்துறையினர் மதுரை டவுன் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையத்தினர் காருக்கு மேலே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!