திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா
திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, பரமக்குடி சின்னக்கடை, திருவள்ளுவர் நகர் மக்களுக்கு நகர் செயலர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி.கே. அருளாந்து ஆகியோரின் ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், காய்கறிகள் வழங்கப்பட்டது.பரமக்குடி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஷேக் நஸ்ருதீன், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் பி.கே.பாண்டியன், 35 வார்டு செயலர் முத்து பழனிக்குமார் மற்றும கலீல் ரஹ்மான் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் திமுக., ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் நிவாரணம்
எழுதியவர்: mohan April 24, 2020, 6:22 pm




You must be logged in to post a comment.