18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசாங்க கட்டுபாட்டுக்கு உட்பட்ட மதுரை ஆவின் விற்பனை நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும் அவலம்..

அரசாங்க கட்டுபாட்டுக்கு உட்பட்ட மதுரை ஆவின் விற்பனை நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2020, 11:02 pm

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆவின் விற்பனை நிலையங்கள்.  இந்த விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே பொருட்களை விற்க வேண்டும் என்பது உத்தரவு.  ஆனால் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் உழவர் சந்தையில் உள்ள ஆவின் பூத் பூத் எண்543 ஆவின் நிறுவன டிப்போவில் விற்கப்படும் தயிருக்கு அரச.5/- கூடுதலாக விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய  சத்திய பாதை மாத இதழ் (கிழை நியூஸ்) நிருபர் குழு, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தில் தயிரின் விலையை விசாரித்த பொழுது  30 ரூபாய் என்று கூறினார், பின்னர் ஏன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 5 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, “இது பழைய பாக்கெட், அதனால் விலை தவறாக உள்ளது,  நாங்கள் இப்படித்தான் கொடுப்போம் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் சென்றுவிடுங்கள்” என்று மிரட்டும் தொனியில் விற்பனையாளர் கூறினார்.

பொதுமக்களின் புகாரை அடுத்தே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த விற்பனை நிலையத்தில் தினமும் 50 பாக்கெட் விற்பனையாகும் தயிரில் மட்டும் விலை கூடுதால வைத்து விற்பனை செய்யவில்லை, இங்கு விற்கப்படும் அனைத்து ஆவின் பொருட்கள் மீதும் இவ்வாறு விலையை கூட்டி விற்பனை செய்கிறார் என்பது பொதுமக்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா ஆவின் நிர்வாகம்?

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!