இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, பேரூராட்சிகளாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட இராமேஸ்வரம், கீழக்கரை என நகராட்சிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம்
நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு குடிநீர், தெரு விளக்குகள், துப்புரவு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொழில், குடிநீர், காலிமனை, வீட்டு வரி மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் இனங்கள் மூலம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறது. மேலும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. குடிநீர் இணைப்பு வீடுகளின் உரிமையாளர்கள் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார் வந்தது. இதனடிப்படையில் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் அறிவுறுத்தல் படி, பொறியாளர் நீலி ஈஸ்வர் தலைமையில் குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள் இன்று சோதனை மேற்கொண்டனர். நாகநாதபுரத்தில் நடத்திய சோதனையில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது.சட்ட விரோதமா பயன்படுத்திய 12 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் மின் மோட்டார்கள் பறிமுதல் : நகராட்சி அதிரடி
எழுதியவர்: mohan April 24, 2020, 5:55 pm




You must be logged in to post a comment.