17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏழை குடும்பங்களுக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் உதவி

ஏழை குடும்பங்களுக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் உதவி

எழுதியவர்: mohan April 24, 2020, 10:04 am

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயால் இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி செய்யும் ஏழை குடும்பங்களுக்கு மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் அரிசி , காய்கறி உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் புதுத்தெரு, இரயிலடி , ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தினசரி வேலை செய்யும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதே போல நோய் பரவாமல் தடுக்க பணியாற்றி வரும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசங்களை மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலர் குழுவிடம் வழங்கப்பட்டது. இந்த உதவிகளை மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல், துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன் , பாபு உள்ளிட்டோர் வழங்கினர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!