17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லி முகாமில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை..

டெல்லி முகாமில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை..

எழுதியவர்: Askar April 24, 2020, 9:31 am

டெல்லி முகாமில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை..

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் 24 ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் டெல்லிக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா பரி சோதனைக்காக தனிமைப் படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

கொரோனா தொற்று இல்லை என்றாலும் தற்போது ஊரடங்கின் காரணமாக தமிழகம் வர இயலாத சூழலில் பல நாட்களாக டெல்லியில் சிக்கித் தவிக்கின்றனர்.

தங்களுக்கு போதிய உணவும், போதிய மருத்துவமும் மற்றும் சுகாதார பராமரிப்பும் அளிக்கப்படாமல் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய வேதனையை தமிழகத்தில் வாழ்கின்ற தங்களுடைய உறவினரிகளிடம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்களுக்கு அம்மாநில அரசுகள் தேவையான உதவிகளையும், தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு இது போன்ற உதவிகள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சரியான நேரத்தில் ஊர் வர முடியாமல் சிக்கிக் கொண்ட அவர்களை தமிழகம் அழைத்து வர வேண்டும்

அல்லது டெல்லியில் தங்கி இருக்கும் காலங்களில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை முறைப்படி அரசு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு, இ.முஹம்மது, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!