17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா..சுகாதார துறை கட்டுப்பாட்டில் கோவில் பகுதி..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா..சுகாதார துறை கட்டுப்பாட்டில் கோவில் பகுதி..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2020, 5:46 pm

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் பட்டரின் தாயிக்கு கொரானா ஏற்பட்டுள்ளதால் கோவில் முழுவதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தினமும் 6 கால பூஜை நடைபெற்று வருகிறது. சுவாமி, அம்பாள், பரிகார மூர்த்தி என  பூஜை செய்ய  நூற்றுக்கும் மேற்பட்ட  பட்டர்கள் பூஜை செய்கின்றனர்.

இந்நிலையில் தானப்ப முதலி தெருவை சேர்ந்த பட்டரின் தாய்க்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிகுறியுடன் தென்பட்டார் இன்று (23/04/2020) அவருக்கு கொரானா உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து  பட்டரின் தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரானா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் வசித்த தெரு முழுவதும் கிருமி நாசினி அடித்து வரு சின்றனர். தானப்ப முதலி தெரு முழுவதும் பேரி கார்டரால் அடைத்து வருகின்றனர்.

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது கோவிலில் பூஜை செய்த அனைத்து பட்டர்களுக்கும், கோவில் ஊழியர்கள், கோவில் காவல் பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும் தற்பொழுது மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது. உலக வரலாற்றில் இப்போது தான் கோவில் நான்கு கோபுர வீதிகளும் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!