கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு மார்ச் 25 முதல் அமலில் உள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் பகுதியில் தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 1,000
குடும்பங்களுக்கு பைத்துல்மால் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வை மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் துவங்கி வைத்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், சேவுக பெருமாள், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் காமீல் உசேன், ஒன்றிய குழு உறுப்பினர் அஜ்மல் செரீப், பைத்துல்மால் தலைவர் அப்துல் காதர், செயலாளர் ரைசுல் இஸ்லாம், பொருளாளர் முஸ்தபா உள்பட பலர் பங்கேற்றனர்.
புதுமடம் பகுதியில் வாழ்வாதாரம் பாதித்த 1000 பேருக்கு நிவாரணம்
எழுதியவர்: mohan April 23, 2020, 4:46 pm




You must be logged in to post a comment.