17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்மிகை மாநிலம்.. உபயோகம் குறைவால் உற்பத்தி குறைப்பு.. ஆனால் கீழக்கரையில் தொடர் மின் வெட்டு..

மின்மிகை மாநிலம்.. உபயோகம் குறைவால் உற்பத்தி குறைப்பு.. ஆனால் கீழக்கரையில் தொடர் மின் வெட்டு..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2020, 1:29 am

தமிழகம் மின் மிகை மாநிலம், உபயோக குறைவினால் உற்பத்தி குறைப்பு என்று கூட்டம் முழுவதும் ஆளும் வர்க்கத்தினரால் கீழக்கரை போன்ற சிறு நகருக்கு சீரான மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்பதுதான் வேதனையான விசயம்.

கீழக்கரை வடக்கு தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து 1 வாரமாக SS17 எண் ட்ரான்ஸ்போர்மரில்  இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுகிறது, Multi 3 Phase இணைப்பு உள்ளவர்களுக்கும் சீரான மின்சாரம் கிடைப்பதில்ரை.

அதையும் தாண்ணி சில மணி நேரம்  மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இது சம்பந்தமாக மின் நிலைய அதிகாரிகளிடம்  முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.  மேலும் இன்னும் இரண்டு தினங்களில் ரமலான் தொடங்க உள்ள நிலையில் இந்த மின் வெட்டு தொடர்ந்தால் பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.  இந்த  தொடர் மின்வெட்டு தொடர்ந்தால் அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!