17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மத ஒற்றுமையை சீர் கெடுக்கும் ரீதியில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அனைத்து ஜமாத் சார்பாக காவல் நிலையத்தில் புகார்..

கீழக்கரையில் மத ஒற்றுமையை சீர் கெடுக்கும் ரீதியில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அனைத்து ஜமாத் சார்பாக காவல் நிலையத்தில் புகார்..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2020, 12:37 am

கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்களும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், போல் ஒற்றுமையாக உறவுடன் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரையை சார்ந்த இளைஞர் ஒருவர் மத பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு தவறான வீடியோவை பதிவிட்டதால் பொதுமக்கள் மத்தியில் ஓரு அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கீழக்கரை அனைத்து ஜமாத் கமிட்டி சார்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஆனால் இச்சூழலில் சமூக தளத்தில் இன்று (22/04/2020) அந்நபர் மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ள வீடியோவில் இது ஒரு ஆண்டுக்கு முன்னர் அறியாமல் வெளியிட்டது என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கதக்கது.

கீழைநியூஸ் – SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!